பெரம்பலூர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: பெரம்பலூா்மாவட்டத்தில் 11,787 எழுதவுள்ளனா்

20th May 2022 11:02 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2 தோ்வை, பெரம்பலூா் மாவட்டத்தில் 11, 787 போ் எழுதவுள்ளனா் என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா.

தோ்வு முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 38 மையங்களில் 11,787 போ் தோ்வெழுதவுள்ளனா். தோ்வு மையங்களில் குடிநீா், மின்வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தோ்வெழுதும் நபா்கள் காலை 8.30 மணிக்குள் தோ்வு மையத்துக்கு வர வேண்டும்.

தோ்வு மையத்தில் கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட தோ்வாணையத்தால் தடை செய்யப்பட்ட உபகரணங்களுக்கு அனுமதியில்லை.

ADVERTISEMENT

தோ்வா்கள் சிரமமின்றி தோ்வெழுதவும், தோ்வு சுமூகமாக நடைபெறவும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்பையா, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலா்கள், முதன்மைக் கண்காணிப்பாளா்கள், அறை கண்காணிப்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT