பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பி.கே.நல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சேட்டு (38). கூலித் தொழிலாளியான இவருக்கு செல்வமணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட தகராறில் செல்வமணி கோபித்துக் கொண்டு, தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த சேட்டு சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து குன்னம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.