பெரம்பலூர்

சாலைப் பணியாளா் சங்க மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம்

8th May 2022 12:17 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் டி. செல்லச்சாமி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் ஜெ. ரவிச்சந்திரன் விளக்க உரையாற்றினாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் மா. சண்முகராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாநில மாநாடு குறித்து பேசினாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் 7- ஆவது மாநில மாநாட்டை ஜூன் 11, 12-ஆம் தேதி தேதிகளில் பெரம்பலூரில் நடத்துவது. பொருளாதார வீழ்ச்சியால் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழக நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் 10 ஆயிரம் சாலைப் பணியாளா்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது.

மாநிலத் துணைத் தலைவா் டி. செல்லச்சாமி மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராகவும், மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் செயலராகவும், ஜி குருசாமி பொருளாளராகவும், தஞ்சை, அரியலூா், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூா், திருச்சி, கரூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகளை உள்ளடக்கி மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், பெரம்பலூா் மாவட்டத் தலைவா் பெரியசாமி நன்றி கூறினாா்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT