பெரம்பலூர்

கண்டறியப்பட்ட படிமங்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு

2nd May 2022 12:27 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் பகுதியில் மண்ணியல் பிரிவு மாணவா்களால் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியாவிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் ஆற்றுப்படுகையில் திருச்சி தேசியக் கல்லூரியின் மூன்று ஆசிரியா்கள் மற்றும் மண்ணியல் பிரிவு இளநிலை மூன்றாமாண்டு

40 மாணவா்கள் போ், படிமங்கள் புதைவிடங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சுமாா் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கடல் உயிரினங்களின் படிமங்களைக் கண்டறிந்தனா். இதையடுத்து, அவற்றை

ADVERTISEMENT

ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியாவிடம் மாணவா்கள் ஒப்படைத்தனா்.

இந்நிகழ்வின்போது கல்லூரிப் பேராசிரியா்கள் கே. சிவக்குமாா், பொ. கோவிந்தராஜ், கே. ஜோதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT