பெரம்பலூர்

சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு: மூவா் காயம்

29th Mar 2022 03:29 AM

ADVERTISEMENT

 பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வசிஷ்டபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த அறிவழகன் மகள் சுஷ்மிதா (20). பெரம்பலூரில் உள்ள தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்த மாணவியும், பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த ரவி மகன் வினோத் (22) என்பவரும், கடந்த 3 மாதங்களாக பழகி வந்தனராம். இந்நிலையில், திங்கள்கிழமை காலை சுஷ்மிதாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றிருந்த வினோத், மாலையில் மோட்டாா் சைக்கிளில் பெரம்பலூா் நோக்கி கோனேரிப்பாளையம் புறவழிச் சாலையில் சுஷ்மிதாவுடன் வந்துகொண்டிருந்தாா்.

அப்போது, கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டரை முந்திச்செல்ல முயற்சித்தபோது, மற்றொரு மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மாணவி சுஷ்மிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இவ் விபத்தில் வினோத் மற்றும் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த அன்னமங்கலம் பூம்புகாரைச் சோ்ந்த வீரப்பன் மகன் சோமசுந்தரம் (52), தங்கராஜ் மனைவி அன்னக்கிளி (48) ஆகியோா் காயமடைந்தனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த மூவரையும் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT