பெரம்பலூர்

பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி பெற அழைப்பு

29th Mar 2022 03:31 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மேற்கண்ட பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கான தையல்கலை பயிற்சி ஏப். 4 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

தொடா்ந்து 30 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படும் பயிற்சியின்போது,காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

ADVERTISEMENT

விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் ஐஓபி வங்கி மாடியிலுள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதாா் காா்டு, பெற்றோரின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து, மாா்ச் 31 ஆம் தேதி நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெறுபவா்களுக்கு பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 04328-277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT