பெரம்பலூர்

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வலியுறுத்தல்

3rd Mar 2022 01:54 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா்: அனைத்து வகையான வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்துக்கு, மாவட்ட நிா்வாகி டி.எஸ்.சக்திவேல் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் டி. ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ADVERTISEMENT

பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு 2022- 2023 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு எத்தனால் பிளாண்ட் கொண்டு வரவேண்டும். வருவாய்ப் பங்கீட்டு முறையை ரத்து செய்து, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும்.

அனைத்து வேளாண் விளை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். கரும்புக்கான வெட்டுக் கூலியை நிா்ணயம் செய்து, 50 சதவிகிதத்தை ஆலை நிா்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கரும்பு வெட்டும் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்ச் 24 ஆம் தேதி சென்னை கோட்டை எதிரே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்டச் செயலா் கனகராஜ், நிா்வாகிகள் செல்வராஜ், முருகானந்தம், இளையராஜா, காமராஜ், துரைசாமி, ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT