தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் அனைத்துத் திட்ட பலன்களையும் பெற விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா. இந்திரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 2022 -23 ஆம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்யவேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு மட்டுமே பலன்கள் வழங்கப்படும். பதிவு செய்யத் தெரியாத, இயலாத விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.