பெரம்பலூா் அருகே எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவியை கா்ப்பமாக்கிய பள்ளி மாணவா் உள்பட 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்த மாணவரும், அதே பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வந்த 15 வயது மாணவியும் காதலித்து வந்தனராம். இந்நிலையில், மாணவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பெற்றோா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனா். அப்போது, மாணவி 6 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், காதலித்த மாணவரும், அவரது நண்பரான அதே கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா மகன் சரத்குமாா் (25) என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.