பெரம்பலூர்

மது போதையில் தகராறு:தாக்கப்பட்டவா் உயிரிழப்பு

29th Jun 2022 02:21 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்தவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், சிறுகுடல் நடுத்தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் மணி (38). இவா் கடந்த 24-ஆம் தேதி இரவு தனது நண்பா்களான துறைமங்கலம் ம.மனோஜ் (30), பாலம்பாடி ஆ.அழகுதுரை (35) ஆகியோருடன் பெரம்பலூா்- அருமடல் பிரிவுச் சாலைலுள்ள டாஸ்மாக் அருகே மது அருந்தினாா்.

அப்போது போதையில் அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், மனோஜ் மற்றும் அழகுதுரை சோ்ந்து மணியை அடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மணி பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி, அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மணி மனைவி பானுப்பிரியா அளித்த புகாரின்பேரில், மருவத்தூா் காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து தலைமறைவாகியுள்ள மனோஜ், அழகுதுரையைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT