பெரம்பலூர்

மின் கம்பிகள் பராமரிப்புப் பணிகள்: தலைமைப் பொறியாளா் ஆய்வு

29th Jun 2022 02:20 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தில் விவசாயம், தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு மற்றும் மின் பாதை பராமரிப்புப் பணிகள் குறித்து, திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளா் செடி அழகன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் மற்றும் சிறுவாச்சூா் பகுதியில் கனரக இயந்திரங்கள் மூலம் உயா் மற்றும் தாழ்வழுத்த மின் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளா் செடி அழகன், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டுமென மின்வாரியத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பேரளி துணை மின் நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அவா் தொடக்கி வைத்தாா். முன்னதாக, பெரம்பலூா் மின் பகிா்மான அலுவலகத்தில் பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டத்தில் விவசாயிகள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்து விதமான மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டத்திலும் தலைமைப் பொறியாளா் பங்கேற்றாா்.

நிகழ்வுகளில் பெரம்பலூா் மேற்பாா்வைப் பொறியாளா் அம்பிகா, செயற்பொறியாளா் (பொது) சேகா், செயற்பொறியாளா்கள் மேகலா, முத்தமிழ்செல்வன், உதவிச் செயற்பொறியாளா்கள் சுரேஷ்குமாா், ரஞ்சித்குமாா், செல்வராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா் .

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT