பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி பெண் புள்ளிமான் உயிரிழப்பு

29th Jun 2022 02:17 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பெண் புள்ளிமான் உயிரிழந்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மயில், மான், காட்டுப் பன்றி உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன.

இந்த விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீா் கிடைக்காததால், குடியிருப்புப் பகுதிகளுக்கும், விளைநிலங்களுக்கும் சென்று அவ்வப்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ,திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவையூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற 4 வயது பெண் புள்ளிமான் மீது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே மான் உயிரிழந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து நிகழ் விடத்துக்குச் சென்ற வனத்துறையினா், மான் சடலத்தை கைப்பற்றி கால்நடை மருத்துவா் மூலம் பிரேத பரிசோதனை செய்து அங்குள்ள வனப்பகுதியில் புதைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT