பெரம்பலூர்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

29th Jun 2022 02:21 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், திம்மூா் கிராமத்தைச் சோ்ந்த க. பச்சமுத்துவுக்கு சொந்தமான கிணற்றில் அடையாளம் தெரியாத, 35 வயதுக்குள்பட்ட ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக குன்னம்

காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நிகழ்விடம் சென்ற காவல்துறையினா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின்பேரில், குன்னம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT