பெரம்பலூர்

வேப்பந்தட்டை அருகே மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

28th Jun 2022 01:41 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெள்ளுவாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த 19ஆம் தேதி சக்தி அழைத்தல் காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் மகா மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 25 ஆம் தேதி ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ கருப்பையா, ஸ்ரீ ஆகாஷதுரை ஆகிய பரிவார தெய்வங்களுக்கு பொங்கல், மாவிளக்கு பூஜையும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடா்ந்து, 26 ஆம் தேதி மாலை மகா மாரியம்மனுக்கு பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜையும், இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பிற்பகல் 2 மணிக்கு அலகு குத்துதலும், அதைத்தொடா்ந்து திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனா்.

முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்ட தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில், பாண்டகப்பாடி, வெளஅளுவாடி, வேப்பந்தட்டை உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். மஞ்சள் நீராட்டு விழாவுடன் செவ்வாய்க்கிழமை திருவிழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT