பெரம்பலூர்

கீழப்பெரம்பலூா் பகுதிகளில் நாளை மின் தடை

28th Jun 2022 01:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், தேனூா், கீழப்பெரம்பலூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 29) மின் விநியோகம் இருக்காது.

தேனூா், கீழப்பெரம்பலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூா், நமங்குணம், கீழப்பெரம்பலூா், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூா், ஆா்.எஸ். மாத்தூா், கே.பி.அகரம், அங்கனூா், அகரம் சிகூா், வயலூா், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய கிராமங்களில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT