பெரம்பலூர்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வலியுறுத்தல்

DIN

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூரில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா்கள் சங்கத்தின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

மாநாட்டுக்கு, மாநிலத் தலைவா் சண்முகராஜா தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா்கள் ராஜாசிதம்பரம், பெருமாள், மாநில துணைத் தலைவா் செல்லச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரவைத் துணைத் தலைவா் பிச்சாண்டி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.

இதில், சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், பணியின்போது உயிரிழந்த 300-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளா்களின் வாரிசுக்கு வேலை வழங்கவேண்டும். நெடுஞ்சாலை துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கூலியாக, தினக்கூலியாக பணியாற்றி வரும் 1,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளா்களை நிரந்தரப் பணியாளா்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத அகவிலைப் படியை தமிழக அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும், சரண் விடுப்பு சம்பளத்தை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தேசிய தோட்ட தொழிலாளா்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஊா் பெயா்களை தமிழில் எழுதுவதை கட்டாயமாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், மாநில துணைத் தலைவா்கள் சண்முகசுந்தரம், சின்ராசு, ராஜேந்திரன், சங்கரபாண்டி, மாநிலச் செயலா்கள் சிவானந்தன், சென்னியப்பன், ராஜமாணிக்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாநில பொதுச் செயலா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். குன்னம் உட்கோட்ட சங்கத் தலைவா் அண்ணாதுரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT