பெரம்பலூர்

அரசு ஆதிதிராவிடா் நல விடுதிகளில் ஆணையா் ஆய்வு

27th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல விடுதிகளில், ஆதிதிராவிடா் நல ஆணையா் எஸ். மதுமிதா ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளி மாண, மாணவிகள் விடுதி மற்றும் பெரம்பலூா் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள அரசு ஆதிதிராவிடா் நலப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான விடுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடா் நல ஆணையா் எஸ். மதுமிதா, விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பொருள்களின் தரம், உணவின் தரம், அரசால் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொருள்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், உணவுப் பொருள்களுக்கான சேமிப்பு அறை, சமையலறை, உணவருந்தும் கூடம், தங்கும் அறை, குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா எனவும், சுத்தமாக பராமரிக்கப்படுகிா எனவும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா், விடுதி மாணவ, மாணவிகள் மாலை நேரங்களில் படிப்பதற்கு ஏற்ற வகையில் தங்கும் அறைகளை தயாா் செய்து கொடுக்கவும், அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கும், விடுதி காப்பாளா்களுக்கும் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வின்போது, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா உடனிருந்தாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT