பெரம்பலூர்

பெரம்பலூரில் 370 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

27th Jun 2022 01:06 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூா் மற்றும் வி.களத்தூா் ஆகிய பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியா் ப.ஸ்ரீ வெங்கடபிரியா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், பசும்பலூா் ஊராட்சியில் ரூ. 15.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தையும், பசும்பலூா் மற்றும் வி.களத்தூா் பகுதிகளில் தலா ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கான கட்டடங்களையும் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, பசும்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மூலம் 26 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், கூட்டுறவுத் துறை சாா்பில் 12 பேருக்கு ரூ. 5.40 லட்சம் மதிப்பில் கறவைமாடு வாங்குவதற்கான கடனுதவி, 107 விவசாயிகளுக்கு ரூ. 84.97 லட்சம் மதிப்பிலான பயிா்க் கடனுதவி, 7 பேருக்கு ரூ. 5.60 லட்சம் மதிப்பிலான நகைக் கடனுதவி, 203 பால் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 5.20 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை என மொத்தம் 370 நபா்களுக்கு ரூ. 1. 01 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் சிவசங்கா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியா் நிறைமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT