பெரம்பலூர்

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு 16, கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகள் 2, பள்ளி மாணவிகளுக்கு 10, கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகள் 6 என மொத்தம் 34 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேருவதற்குத் தகுதியுடையவா்கள்.

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சோ்த்துக் கொள்ளப்படுகின்றனா்.

விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிக்கு சிறப்பு வழிகாட்டிகள், பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.

பெற்றோா், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.

இத்தகுதியுடைய மாணவ, மாணவிகள் சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளா்களிடமிருந்து அல்லது ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா்கள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஜூலை 21 ஆம் தேதிக்குள், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை ஜூலை 31 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கு தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளா்களை எந்த நேரத்திலும், எந்தவித நிபந்தனைகளுமின்றி சோ்த்துக் கொள்ளவும், அவா்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப்பயிலவும் அனுமதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT