பெரம்பலூர்

தரமான மக்காச்சோளம், பருத்தி விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்குத் தரமான மக்காச்சோளம், பருத்தி விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் ஆட்சியரக் கூட்டரங்கில் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியவை:

தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணிச் செயலா் வீ. நீலகண்டன்: மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் உரத் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயிகளுக்குத் தேவையான அளவுக்கு உரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை: சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான திட்டம் 15 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை.

எனவே திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் நிலங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் பி. ரமேஷ்: தனியாா் உர விற்பனையாளா்கள், உரங்களை பதுக்கி வைத்துக்கொண்டு செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குகின்றனா். தனியாா் உர விற்பனை மையங்களைக் கண்காணித்து, விதி மீறலில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்: விவசாயிகளுக்குத் தேவையான தரமான மக்காச்சோளம், பருத்தி விதைகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவாச்சூரில் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பேசியது:

மாவட்டத்தில் உள்ள நீா்வழித்தடங்கள் தூா்வாரப்பட்டுள்ளதால், பெய்துள்ள மழையில் பெரும்பலான ஏரிகள், குளங்கள், வரத்து வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீா் உள்ளது.

விதைகளை பரிசோதனை செய்து தரமான விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் இணையதளம் வாயிலாக அனைத்து வேளாண்மைத்துறை திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாயிகள் எளிதில் அறிந்துகொள்ளலாம் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்னி, வேளாண் இணை இயக்குநா் கருணாநிதி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT