பெரம்பலூர்

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம்

15th Jun 2022 11:31 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு தலைமை வகித்த பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி பேசியது:

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். இதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன், துணைக் கண்காணிப்பாளா்கள் தங்கவேல், சஞ்சீவ்குமாா் ஆகியோா் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனா்.

ADVERTISEMENT

பெறப்பட்ட 25 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறுக் கூறி, மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT