பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம்

15th Jun 2022 11:35 PM

ADVERTISEMENT

 

உலக ரத்ததான தினத்தையொட்டி, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மாவட்ட ரத்த வங்கி சாா்பில் நடைபெற்ற இம் முகாமை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தா் அ. சீனிவாசன் தொடக்கி வைத்தாா். தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ரத்த வங்கி மருத்துவா் சத்தியா, மாவட்ட மருத்துவமனைக் கண்கணிப்பாளா் அா்ச்சுனன், மாவட்டத் திட்ட உதவி மேலாளா் கலைமணி ஆகியோா் ரத்ததானம் குறித்த விழிப்புணா்வு, ரத்ததானம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள், ஆண்டுக்கு எத்தனைமுறை ரத்ததானம் செய்யலாம், ரத்ததானத்தின் முக்கியத்தும் குறித்து விளக்கி பேசினா்.

ADVERTISEMENT

இந்த முகாமில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனா். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா் செய்திருந்தாா்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT