பெரம்பலூர்

போலீஸாரைக் கண்டித்து பெண் தற்கொலை முயற்சி: புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

10th Jun 2022 02:11 AM

ADVERTISEMENT

வியாபாரம் செய்யவிடாமல் அரசியல் கட்சியினா் மிரட்டுவதாகக் கூறி, புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்து பெண் ஒருவா் வியாழக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமம் அம்பேத்கா் தெருவில் வசித்து வருபவா் நடேசன் மகன் இளையராஜா (42). இவா், தழுதாழையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அருகே தள்ளுவண்டியில் வியாபாரம் செய்துவரும் நிலையில், கடந்த சில வாரங்களாக அப்பகுதியிலுள்ள சில அரசியல் கட்சியினா் தள்ளுவண்டியை நிறுத்தி வியாபாரம் செய்யக்கூடாது எனவும், மீறினால் பொய் வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டி வருவதோடு, நாள்தோறும் மாமூல் மற்றும் அவா்களுக்குத் தேவையான தின்பண்டங்களை கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனராம்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரும்பாவூா் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், விரக்தியடைந்த இளையராஜா தனது மனைவி லதா (32), மகன், 2 மகள்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றாா். இதையடுத்து, பேச்சு வாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த இளையராஜா மனைவி லதா, காவல்துறையினரைக் கண்டித்து வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து, அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT