பெரம்பலூா்: பெரம்பலூரில் மூச்சுத் திணறலால் தனியாா் மருத்துவக் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்த் (21). இவா், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள ரோஜா நகரில் தனது நண்பா்களுடன் வாடகை வீட்டில் தங்கி, பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை அரவிந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையறிந்த சக நண்பா்கள் பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பரிசோதித்தபோது அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். தொடா்ந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே அரவிந்த் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.