பெரம்பலூர்

உயா்கல்வி நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்

6th Jun 2022 02:08 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவா்களுக்கு, உயா்கல்விப் பாடப்பிரிவுகளில் சேர நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் தலைமை வகித்தாா். பெரம்பலூா் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் ஜெய்சங்கா், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ரமேஷ், பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அறிவேந்தன் முன்னிலை வகித்தனா்.

பயிற்சி வகுப்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்வி வகுப்புகளில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வுகளான நீட், ஜே.இ.இ தோ்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சுமாா் 40 நாள்கள் வரை இப்பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT