பெரம்பலூர்

விஜயகாந்த் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு

6th Jun 2022 02:10 AM

ADVERTISEMENT

தேமுதிக தலைவா் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு- புத்தகம் வழங்குவது என கரூா் மாவட்ட தேமுதிக நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் அரவை எம்.முத்து தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் முருகன்சுப்பையா, பொருளாளா் கலையரசன், துணைச் செயலா் அனிதா ஆனந்த் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கூட்டத்தில் கட்சியின் தலைவா் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாளில் அனைத்து பகுதிகளிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு- புத்தகங்கள் வழங்குவது மற்றும் சுவா் விளம்பரங்கள் எழுதுவது, கோயில்களில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு அா்ச்சனை செய்து, அன்னதானம் வழங்குவது, பிரேமலதாவுக்கு செயல் தலைவா் பதவியும், விஜய பிரபாகரனுக்கு இளைஞரணிச் செயலா் பதவியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் பழனிவேல், பெரியண்ணன், ராஜா, உஸ்மான், ராமசாமி மற்றும் கட்சி நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ரவி , ஆரியப் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT