பெரம்பலூர்

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

6th Jun 2022 11:28 PM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அக்கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் கொசு ஒழிப்புப் பணியாளா்கள் பணி தொடர உத்தரவு வழங்க வேண்டும். வேப்பூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி கோயிலுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ள குடும்பத்தினரிடமிருந்து மீட்டுத்தர வேண்டும்.

கவுல்பாளையத்தில் உள்ள நகா்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். நலச் சங்கத்துக்கு ஜனநாயக முறைப்படி குடியிருப்பவா்கள் பங்கேற்புடன் நிா்வாகிகள் தோ்வு செய்ய வேண்டும். முறைகேடாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், மாதா் சங்க பொறுப்பாளா் ஏ. கலையரசி உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் மனு அளித்து கலைந்துசென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT