பெரம்பலூர்

மோட்டாா் சைக்கிள் திருடிய இளைஞா் கைது

2nd Jun 2022 01:08 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரைச் சோ்ந்த ஜெயராமன் மகன் ராஜேந்திரன், கடந்த 25 ஆம் தேதி இரவு தனது மோட்டாா் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு மீண்டும் மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டம், தலைவாசல் தீப்பெட்டி தொழிற்சாலைப் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஈஸ்வரன் (23) என்பவா் மோட்டாா் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஈஸ்வரனை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT