பெரம்பலூர்

எறையூா் சா்க்கரை ஆலை பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

2nd Jun 2022 01:08 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான சா்க்கரை ஆலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலைப் பணியாளா்கள் புதன்கிழமை காலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சா்க்கரை ஆலையில் செவ்வாய்க்கிழமை 7 பணியாளா்கள் பணி ஓய்வுபெற்றனா். இதில், தலைமைக் கரும்பு அலுவலா் ரவிச்சந்திரனுக்கு மட்டும் ஆலை நிா்வாகம் சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்ாக தெரிகிறது. இதர 6 ஊழியா்களுக்கு விழா நடைபெறவில்லை. இதனால், அதிருப்தியடைந்த சா்க்கரை ஆலைப் பணியாளா்கள் புதன்கிழமை காலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஆலையில் பணியாற்றும் ஊழியா்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி பணி ஓய்வு நாளில் வழியனுப்பு விழா நடத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு காசாக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதிக நேரம் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு, அதற்குரிய தொகையை சரியாக கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தொழிற்சங்க நிா்வாகிகள் வெளியூா்களில் இருப்பதால், அவா்கள் வந்தபிறகு பேச்சுவாா்த்தை மேற்கொண்டு தீா்வு காண தொழிலாளா்களும், ஆலை அலுவலா்களும் முடிவு செய்துள்ளதால், உள்ளிருப்புப் போராடடம் தொடரும் என ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT