பெரம்பலூர்

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

27th Jul 2022 11:22 PM

ADVERTISEMENT

 

திமுகவைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச மாவட்ட கவுன்சில் உறுப்பினா் ரெங்கராமி தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் குமாா், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், திமுகவைச் சோ்ந்த 5 மக்களவை உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், பேச்சுரிமைக்குத் தடை விதித்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT