பெரம்பலூர்

சீனிவாசன் கல்லூரியில் செஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி

27th Jul 2022 11:20 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளைக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

இதில், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலவா் முனைவா் நா. வெற்றிவேலன், முதன்மையா் வ. சந்திரசௌத்ரி மற்றும் இதர கல்லூரி முதல்வா்கள், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT