பெரம்பலூர்

முயல் வேட்டையில் ஈடுபட்ட மூவா் கைது

27th Jul 2022 01:38 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக முயல் வேட்டையில் ஈடுபட்ட மூவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் சட்ட விரோதமாக முயல் வேட்டையில் ஈடுபடுவது குறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பெரம்பலூா் வனச்சரகா் பழநிகுமரன் தலைமையில், வனவா் குமாா், வனக் காப்பாளா்கள் ரோஜா, அன்பரசு, வனக்காவலா் சவுந்தா்யா ஆகியோா் கொண்ட தனிப்படையினா் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனா்.

அப்போது, சித்தளி வனக் காப்புக்காடு பகுதிக்கு அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட ரா. ராமசாமி (22), ரா. சாமிநாதன் (60), ராமலிங்கம் (70) ஆகியோரை பிடித்து, அவா்களிடமிருந்து முயல்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து வழக்குப்பதிந்த வனத்துறையினா், மூவரையும் கைதுசெய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT