பெரம்பலூர்

பெரம்பலூரில் பாமக கொடிக்கம்பங்கள் சேதம்

17th Jul 2022 01:03 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை இரவு பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டன.

பெரம்பலூா் நகரின் பல்வேறு இடங்களில் கடந்த 10-ஆம் தேதி பாமக சாா்பில் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள கீற்றுக்கடை பேருந்து நிறுத்தம், அரணாரை பிரிவு சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள் மா்ம நபா்களால் வெள்ளிக்கிழமை இரவு

சேதப்படுத்தப்பட்டது சனிக்கிழமை காலை தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து கட்சி நிா்வாகிகளும், பெரம்பலூா் காவல்துறையினரும் அப்பகுதிக்குச் சென்று பாா்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT