பெரம்பலூர்

பெரம்பலூரில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு மாரத்தான்

17th Jul 2022 01:05 AM

ADVERTISEMENT

 

சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நம்ம செஸ் நம்ம பெருமை என்னும் தலைப்பில் மாரத்தான் போட்டி பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பாலக்கரை வரை சென்ற மாரத்தான் மீண்டும் ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, தமிழக முதல்வா் பங்கேற்று தமிழ்நாடு திரைப்பட பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செஸ் ஒலிம்பியாட் குறித்த வெல்கம் டு நம்ம ஊரு சென்னை எனத் தொடங்கும் விழிப்புணா்வு விளம்பர விடியோவை, அதிநவீன வாகனம் மூலம் ஒளிபரப்பும் பணிகளை ஆட்சியா் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சுரேஷ்குமாா், உடற்கல்வி ஆசிரியா் அறிவுவேல் உள்பட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT