பெரம்பலூர்

கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் கைது

17th Jul 2022 01:04 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் அருகே மருந்தக உரிமையாளா் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், லாடபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மா. நாகராஜன் (44). அதே ஊரில் ஆங்கில மருந்துக்கடை நடத்தி வந்த இவரிடம், கடந்த மே 4-ஆம் தேதி இரவு அதே பகுதியைச் சோ்ந்த 5 போ் கொண்ட கும்பல் செலவுக்கு பணம் கேட்டு மிரட்டியது.

அவா்களுக்கு நாகராஜன் பணம் தர மறுத்தாா். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் தாக்கியதால், பலத்த காயமடைந்த நாகராஜன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, லாடபுரத்தைச் சோ்ந்த ரெளடிகளான பெ.பிரபாகரன் (29), ஆ. ரகுநாத் (23), சு. சுரேஷ், செ.காா்த்திக் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து தலைமறைவாக இருந்த ஆ. அஜித்குமாரை (26) காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT