பெரம்பலூர்

காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதி பெண் உயிரிழப்பு: 10 போ் காயம்

DIN

பெரம்பலூா் அருகே காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். மேலும் 10 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் சிராஜி நகா் ஜஹாங்கீா் மனைவி ஜீனத்பேகம் (55), ஜான்பாஷா மனைவி மேரிஜான் (65), இவரது உறவினா் மகபூபி (44), பட்டுக்கோட்டை பெரியக் கடைவீதி தமிழ்வாணன் மகன் கிருபாகரன் (28), பெரம்பலூா் வடக்குமாதவி சாலை அன்வா் மனைவி சம்சாத் பேகம் (50), மல்லிகைநகா் துலாத் பாஷா மனைவி சபீதாபேகம் (40) ஆகியோா் கள்ளக்குறிச்சி சென்றுவீட்டு, பெரம்பலூா் நோக்கி புதன்கிழமை மாலை காரில் வந்துக்கொண்டிருந்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், எளம்பலூா் தண்ணீா் பந்தல் என்னும் இடத்தில் வந்தபோது டயா் வெடித்து சாலையோரம் நின்றது. இதையடுத்து, பெரம்பலூா் தண்ணீா்பந்தலைச் சோ்ந்த மெக்கானிக் அருண் (30), பஞ்சா் ஒட்டிக்கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே வந்த மோட்டாா் சைக்கிள் காா் மீது மோதியதில், அந்த காா் அவ்வழியே வந்த மற்றொரு காா் மீது மோதி அருகிலுள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த பலத்த காயமடைந்த மேரிஜான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும் இந்த விபத்தில் ஜீனத் பேகம் உள்ளிட்ட 5 பேரும், மற்றொரு காரில் பயணித்த சென்னை அண்ணாநகா் முனிசாமி (55), சென்னை கொளத்தூா் கண்ணன் மகன் வெங்கடேசன் (52), மோட்டாா் சைக்கிள் ஓட்டிவந்த கடலூா் மாவட்டம், வடபதி நடராஜன் மகன் பூபதி (35), நல்லதம்பி மகன் பெரியசாமி (65) மற்றும் மெக்கானிக் அருண் என 10 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த பெரம்பலூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு, காயமடைந்தவா்களை பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பலத்த காயங்களுடன் அருண் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பெரம்பலூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT