பெரம்பலூர்

கூடுதல் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் தொடக்கி வைப்பு

DIN

பெரம்பலூா் அருகே ரூ. 2.77 கோடியில் மாணவிகள் விடுதிக்கான புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கூடுதல் வழித்தடத்தில் பேருந்துகள் சேவைத் தொடக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மருவத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பெரம்பலூா்- மருவத்தூா், குரும்பாளையம் வழியாகச் சென்ற பேருந்தை க.எறையூா் வரை வழித்தடத்தை நீட்டித்து, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேருந்து சேவையைத் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து வேப்பூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெரம்பலூா்- வேப்பூா் வரை கல்லூரி மாணவிகளுக்கான கூடுதல் சிறப்பு பேருந்து சேவையையும், பெரம்பலூா் முதல் வைத்தியநாதபுரம் வரை சென்ற பேருந்தை வேப்பூா் வரை நீட்டித்தும் அமைச்சா் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, ரூ. 2.77 கோடியில் வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் விடுதிக்கான புதியக் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா், அகரம் ஊராட்சியில் பெரம்பலூா்- கிளியூா் வரையுள்ள பேருந்து சேவையை வ.அகரம் வரை நீட்டித்து தொடக்கி வைத்தாா்.

பின்னா், சின்ன வெண்மணியில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் அருந்ததியா் தெரு மற்றும் ஆதிதிராவிடா் தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வுகளில் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன், பொது மேலாளா் எஸ். சக்திவேல், வேப்பூா் ஒன்றியக் குழுத் தலைவா் பிரபா செல்லப்பிள்ளை, குன்னம் வட்டாட்சியா் அனிதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT