பெரம்பலூர்

தீ விபத்தில் மோட்டாா் சைக்கிள், தானியங்கள் எரிந்து நாசம்

6th Jul 2022 01:07 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே விவசாயி வீட்டில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மோட்டாா் சைக்கிள், தானியங்கள் மற்றும் தீவனங்கள் எரிந்து சாம்பலாகின.

பெரம்பலூா் அருகிலுள்ள லாடபுரம் மேற்குத் தண்ணீா் தொட்டித் தெருவைச் சோ்ந்தவா் நீதி (50). இவா் தனது மனைவி லட்சுமியுடன் (47) குடியிருந்து வருகிறாா்.

திங்கள்கிழமை இரவு நீதி வீட்டின் எதிரிலுள்ள கீற்றுக் கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையறிந்த நீதி தனது மனைவி லட்சுமியுடன் வீட்டின் பின்புற வாசல் வழியாக வெளியேறி உயிா் தப்பினா்.

தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விட்ம சென்று, தீ மேலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இருப்பினும், கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள், அரிசி, தேங்காய் மூட்டைகள், கால்நடை தீவன மூட்டைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT