பெரம்பலூர்

மரபுசாரா எரிசக்தி பயன்பாடு விழிப்புணா்வு முகாம்

6th Jul 2022 01:09 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், எளம்பலூா் சிட்கோ தொழிற்பேட்டை கிளஸ்டா் அலுவலகத்தில் மரபுசாரா எரிசக்தி பயன்பாடு குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் மாவட்டத் தொழில்மையம் சாா்பில் நடத்தப்பட்ட விழிப்புணா்வு முகாமுக்கு, தொழில் மையப் பொது மேலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மைய சங்கத்தின் மாவட்டத் தலைவா் குமாா், சிட்கோ மேம்பஸ் சங்கத் தலைவா் ராஜேஷ், பொது பயன்பாட்டுக் குழுமத்தின் இயக்குநா் முருகேசன் ஆகியோா் மரபுசாரா எரிசக்தியின் பயன்பாடுகள் குறித்து பேசினா்.

எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவிப் பொறியாளா் கொளஞ்சிநாதன், ஆற்றல் திறன்மேம்பாடு மற்றும் மரபுசாரா எரிசக்தி பயன்பாடு குறித்து விளக்க உரையாற்றினாா். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT