பெரம்பலூர்

இந்தியத் தொழிற்சங்க மையத்தினா் ஆா்ப்பாட்டம்

6th Jul 2022 01:08 AM

ADVERTISEMENT

தொழிலாளா் நலவாரியத்தில் முறைசாரா தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்தியத் தொழிற்சங்க மையம் சாா்பில் பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நலவாரியத்தில் இணையவழிப் பதிவு, புதிப்பித்தல், கேட்பு மனுக்களை பெறுவதில் உள்ள குறைபாடுகளை விரைந்து சரி செய்ய வேண்டும். கேட்பு மனுக்களை உடனடியாக பரிசீலித்து, பணப்பலன்களைத் தாமதமின்றி வழங்க வேண்டும்.

மாத ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். பணியிடங்கள் மட்டுமின்றி, வேறு இடங்களில் விபத்து, உயிரிழப்பு நிகழ்ந்தால் நிவாரணத்தொகை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்.

இயற்கை மரண நிவாரணம் ரூ. 2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஈமச்சடங்கு நிதியை ரூ. 25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியரகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத் துணைத் தலைவா் ரெங்கராஜ் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் ரெங்கநாதன், சிவானந்தம், பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாநில துணைத் தலைவா் ஏ. கிருஷ்ணமூா்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினாா். ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT