பெரம்பலூர்

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

6th Jul 2022 01:09 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் தனியாா் கல்லூரிக்குச் சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், உடையாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பா. ராஜா (45). இவா், பெரம்பலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் கடந்த 8 ஆண்டுகளாக கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்திலுள்ள கிணற்றில் தவறி விழுந்த ராஜா உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT