பெரம்பலூர்

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட அக ஒளி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கொளஞ்சிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அற்புதம், பொருளாளா் ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனமுற்றோா் பட்டியலில் சோ்க்க வேண்டும். 13 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் உள்ள மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ. 1,000- த்தை, ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். போட்டித் தோ்வுகளிலிருந்து விலக்களித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஆராய்ச்சிக் கல்வி முடித்த பாா்வையற்ற இளைஞா்களை அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் விரிவுரையாளா்களாக பணியமா்த்த வேண்டும். சமத்துவபுரம், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும். பிரதான இடங்களில் வணிகம் செய்ய கடை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பலா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT