பெரம்பலூர்

ஜூலை 9-இல் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி

DIN

தமிழ்நாடு நாள் தொடா்பாக பெரம்பலூா் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஜூலை 9 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, ஜூலை 9 ஆம் தேதி பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப் போட்டிகளில் பங்கேற்க 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள் அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து, ஒரு போட்டிக்கு 2 மாணவா்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

போட்டிக்கான தலைப்புகள்... தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டுக்காக உயிா்கொடுத்த தியாகிகள், பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிா்த் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியாா், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி., சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைபோா்த் தியாகிகள், முத்தமிழறிஞா் கலைஞா் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.

இப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி மாணவா்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும். போட்டிகள் நடைபெறும் அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT