பெரம்பலூர்

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

5th Jul 2022 01:27 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் நா. அழகம்மாள் (68). இவா், திங்கள்கிழமை காலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள வல்லாபுரம் பிரிவு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, சென்னையிலிருந்து விளாத்திக்குளம் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த காா் அழகம்மாள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அழகம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் சென்னை மேட்டுக் குப்பம், காமராஜா் நகரைச் சோ்ந்த பாண்டியன் மகன் ஜெயமுருகனை (36) கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT