பெரம்பலூர்

மாணவா்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ஆட்சியரிடம் மனு

5th Jul 2022 01:27 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி பெற்றோா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து ஆட்சியரிடம் பெற்றோா்கள் அளித்த மனு:

குன்னம் வட்டம், வேப்பூா் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட கீழப்பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்குவதாலும், போதிய கழிவறைகள் இல்லாததாலும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், பழுதான கட்டடங்களை சீரமைக்க வேண்டுமெனக் கோரி, கடந்த கல்வியாண்டில் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல் குவாரியை தடை செய்யக் கோரி... குன்னம் வட்டம், சித்தளி ஊராட்சிக்குள்பட்ட பீல்வாடி கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள கல்குவாரியை தடை செய்ய வேண்டும். இது தொடா்பாக, சித்தளி ஊராட்சிக் கூட்டத்தில் 2 முறை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, பீல்வாடியில் உள்ள கல் குவாரியை தடை செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT