பெரம்பலூர்

பூலாம்பாடியில் நாளை திரௌபதி அம்மன் கோயில் குட முழுக்கு விழா

5th Jul 2022 01:26 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே பூலாம்பாடியில் எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை (ஜூலை 6) காலை நடைபெறுகிறது. இதையொட்டி, சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை அதிகாலை தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் சுமாா் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தா்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயில், சுமாா் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் தொழிலதிபா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் மூலம் அண்மையில் புனரமைக்கப்பட்டது. குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை நடைபெறுகிறது.

குடமுழுக்கையொட்டி, திங்கள்கிழமை காலை அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் அங்குராா்ப்பணம், ரட்சாபந்தணம், கும்ப அலங்காரம், முதல்கால யாகபூஜை, தீபாராதனையும் நடத்தப்பட்டது. பின்னா், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 2 ஆம் கால யாகபூஜை, ஸதூபி ஸ்தாபனம், ஜெபஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனையும், மாலையில் 3 ஆம் கால யாகபூஜை, யந்திரஸ்தானம், பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

குடமுழுக்கு நாளான புதன்கிழமை காலை 4.30 மணி முதல் 4 ஆம் கால யாகபூஜை, நாடி சந்தனம், 6 மணிக்கு மகா பூா்ணாஹூதி, கும்பங்கள் புறப்பட்டு கோயிலுக்கு கொண்டுவரப்படுகிறது.

காலை 6.45 மணி முதல் விமானம், ராஜகோபுரங்கள், மூலாலய மூா்த்திகளுக்கு குடமுழுக்கும், தீபாராதனை, அன்னதானமும் 9 மணிக்கு மகாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை, டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் தலைமையில், கிராம பொதுமக்கள், இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT