பெரம்பலூர்

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

5th Jul 2022 01:26 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி காவல்துறையினரைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் மீது பொய் வழக்குப் பதிந்து, வழக்குரைஞா்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி காவல்துறையினரைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு தீா்மானத்தின் படி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் ஆகிய சங்கங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

இதனால், பெரம்பலூா், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT