பெரம்பலூர்

குரும்பலூா், பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை

4th Jul 2022 12:01 AM

ADVERTISEMENT

 

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக குரும்பலூா், பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளா் செல்வராஜ் தெரிவித்திருப்பது:

மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

ADVERTISEMENT

இதனால் குரும்பலூா், பாளையம், புது ஆத்தூா், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூா் பிரிவு சாலை, சிறுவயலூா், குரூா், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூா், கீழக்கணவாய், பொம்மனப்பாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT