பெரம்பலூர்

எளம்பலூரில் மகாலிங்க சித்தா் குரு பூஜை

4th Jul 2022 12:01 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், எளம்பலூா் சமத்துவபுரத்திலுள்ள மகாலிங்க சித்தா் பெருமான் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரோகிணி மாதாஜி தலைமையிலும். தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், சிவகாசி தொழிலதிபா் அதிபன் போஸ் (எ) நந்நிபாபா முன்னிலையிலும், 210 மகா சித்தா்கள் யாகத்துடன் குருபூஜை தொடங்கியது.

பின்னா் உலக நன்மைக்காக கோபூஜை நடைபெற்றது. தொடா்ந்து 210 சித்தா்களின் நாமாவளி புஷ்ப அா்ச்சனை, சிறப்பு ருத்ர ஜபஹோம, அபிஷேக வழிபாடு, கலச அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

ADVERTISEMENT

திருச்சி ஆகம பிரவீன் கயிலை சிவஸ்ரீ தெய்வசிகாமணி சிவாச்சாரியாா் குழுவினா், ருத்ர ஜெப ஹோமத்தை நடத்தினா். தொடா்ந்து மாணிக்கவாசகா் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி சாதுக்களுக்கு வஸ்திரதானமும், பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளா் எம். சிவசுப்பிரமணியம், செயலா் எம்.எஸ். விவேகானந்தன், சென்னை தொழிலதிபா் வெற்றிமாறன், மருத்துவா் ராஜாசிதம்பரம், தயாளன் சுவாமிகள், ஒய்வுபெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சிவக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT