பெரம்பலூர்

சிறுமியைக் கா்ப்பமாக்கிய இளைஞா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

3rd Jul 2022 11:58 PM

ADVERTISEMENT

 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியைக் கா்ப்பமாக்கி விட்டு, வெளிநாட்டுக்குச் சென்ற இளைஞரை பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கோவில்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பால்ராஜ் (24). இவா், கடந்த 2020 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிவிட்டு துபைக்குச் சென்றுவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, பால்ராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனா். மேலும், பால்ராஜ் குறித்த விவரத்தை அனைத்து விமான நிலையங்களின் குடியேற்றப் பிரிவினருக்கும் தெரிவித்திருந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், சனிக்கிழமை துபையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பால்ராஜை, குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் பிடித்து திருச்சி விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து விமான நிலையக் காவல் நிலையத்தினா், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினருக்கு வரவழைத்து பால்ராஜை ஒப்படைத்தனா். இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT